என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கன்னியாகுமரி கடை அடைப்பு
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி கடை அடைப்பு"
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimalatemple #SCverdict
கன்னியாகுமரி:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கேரளாவை போன்று தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கன்னியாகுமரியில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தில் கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், பகவதி அம்மன் சிறுவியாபாரிகள் நல சங்கம், பார்க் வியூ பஜார் வியாபாரிகள் சங்கம்,
விவேகானந்தா சிறுகடை வியாபாரிகள் சங்கம், தமிழன்னை வியாபாரிகள் சங்கம், கடற்கரை சாலை வியாபாரிகள் சங்கம், நட்சத்திர வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்கள் இக்கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
வியாபாரிகளின் போராட்டம் காரணமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு, ரத வீதி, பார்க் வியு பஜார், கடற்கரை சாலை, திரிவேணி சங்கம் போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வியாபாரிகள் போராட்டம் காரணமாக கன்னியாகுமரிக்கு இன்று சுற்றுலா வந்த பயணிகள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இப்போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. #Sabarimalatemple #SCverdict

×

X